Wednesday, September 24, 2014

கடையநல்லுரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்

மத துவேச கருத்துக்கள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் பி.ஜே.பி எம்.பி சாக்சி மஹாரஜை கைது செய்ய வேண்டும். 

உ.பி. நடேமா தொகுதி பி.ஜே.பி, எம்.பி. சாக்சி மஹாராஜ் கடந்த 14 – 09 – 2014 அன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது “மதரஸாக்கள் தீவிரவாதத்தை போதிக்கின்றது என்ற விஷக்கருத்தை உமிழ்ந்துள்ளார். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நாட்டின் பல்வேறு இடங்களில் சிறு சிறு மதக்கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

பி.ஜே.பி எம்.பிக்கள் மேனகா காந்தி, ஆதித்யநாத் போன்றோர் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், தலித்கள், பழங்குடியினர்கள் ஆகியோர்களுக்கு எதிராக தொடர்ந்து பல நச்சுக்கருத்துக்களை விதைத்து வருகின்றனர். இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தேசம் முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்களது வலுவான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றது.

இதன் தொடராக 19 – 09 -2014 அன்று கடையநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் மாலை 5.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாப்புலர் ஃபிரண்டின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் K.A. லுக்மான் ஹக்கிம் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃபிரண்டின் மாவட்ட தலைவர்                D.செய்யது இப்ராஹிம் உஸ்மானி, SDPI – இன் மாவட்ட தலைவர்                 J. ஜாஃபர் அலி உஸ்மானி மற்றும் வடகரை தி.ப.பள்ளி தலைமை இமாம் ஷாஹூல் ஹமீது வாஹிதீ ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் 300 க்கும் அதிகமானோர் திரளாக கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். 

கடையநல்லூர் பகுதியில் சுகாதாரக்கேடு நீர்நிலைகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

கடையநல்லூர் பகுதிகளில் உள்ள ஆறு, கால்வாய், குளங்களில் குப்பைகளோடு, இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் சுற்றுசூழல் மாசுபடுவதோடு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு விவசாயம் நடைபெறுவதால் இங்கு ஏராள மான குளங்கள், கால்வாய்கள் உள்ளது. கடையநல்லூர் நகர பகுதி வழியாக பாப்பான்கால்வாய், சீவலங்கால்வாய் ஆகிய பிர தான கால்வாய்கள் செல் கிறது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு நகர பகுதியில்உள்ள அட்டை குளம், புதுக்குளம் உள் ளிட்ட குளங்களும் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.
கடையநல்லூர் நக ராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகள் இந்த கால்வாய், குளங்கள் மட்டுமின்றி அனைத்து நீர் நிலைகளி லும் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபட்டு வருகிறது. அத்துடன் கடையநல்லூர் பகுதிகளில் தினம்தோறும் உணவுக்காக வெட்டப்படும் நூற்றுக்கணக்கான கோழி, ஆடு, மாடுகள் ஆகியவற்றின் கழிவுகளும் நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. பல பகுதிகளில் துர்நாற்றம் வீசி சுற்றுசூழல் மாசு படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு இப்பகுதியில் நிலவிய சுகாதார சீர்கேட்டினால் மர்ம காய்ச்சலுக்கு 50க்கும் மேற்ப்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது கடையநல்லூரை சேர்ந்த வக்கீல் முகைதீன் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கினால் கோர்ட் உத்தரவின்பேரில் பாப்பான்கால்வாய் உட்பட பல்வேறு கால்வாய் மற்றும் நீர் நிலைகளில் தேங்கி கிடந்த கழிவுகள் பல லட்சம் ரூபாய் செலவில் அகற்றப்பட்டு சுகாதாரம் மேம்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது மீண் டும் நீர் நிலைகளில் குப் பைகள் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவ்து வாடிக்கையாகி வருகிறது. இதை தடுத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் எவ்வித பயனுமில்லை என பொது மக்கள் புலம்புகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நீர்நிலைகளில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றுவதோடு அனைத்து வார்டுகளிலும் நிரம்பி வழியும் சாக்கடைகளையும் அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கடையநல்லூர் அருகே ரெயில்வே பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்த பெண் சாவு

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆனந்த், கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 35). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நோய் குணமானதால் மல்லிகா தனது கணவருடன் பாவூர்சத்திரம் செல்வதற்காக மதுரை– செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வந்தார். பாம்புகோவில் சந்தை ரெயில் நிலையத்தில் கணவன்– மனைவி இருவரும் இறங்கி பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மல்லிகா மயங்கி விழுந்தார். இதையடுத்து மல்லிகாவை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மல்லிகா இறந்துவிட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.